Saturday, February 29, 2020

பிப்ரவரி-29 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


         வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
            மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி
         ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
            ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
         ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
            ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
         காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
            கயிலை மலையானே போற்றி போற்றி.

       சிவபெருமானே! தேவரீர், விண்ணாகவும் மற்றும் நிலம், நீர், நெருப்பு, காற்று என நான்கு பூதங்களாகவும் விளங்குபவர்;;; மீண்டும் பிறக்காமல் என்னை ஆடகொண்டவர்;; உள்ளத்தில் ஊற்றாகத் திகழும் எண்ணத்தில் திகழ்பவர்; ஓயாது மேவும் ஒலியாகுபவர்; ஆற்றும் திறனாகத் திகழ்பவர்; வேதமும் அங்கமும் ஆனவர்; காற்றாகிக் கலந்து மேவுபவர்; கயிலையில் வீற்றிருப்பவர்;. அத்தகைய தேவரீரைப் போற்றுதும்.

திருவாசகம்

 உருத் தெரியாக் காலத்தே
          உள்புகுந்து என் உளம் மன்னிக்
  கருத் திருத்தி ஊன் புக்குக்;
         கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத்
    தித்திக்கும் சிவபதத்தை
   அருத்தியினால் நாய் அடியேன்
         அணிகொள் தில்லை கண்டேனே.


     தன்னுடைய வடிவத்தை நான் அறியாத காலத்திலேயே எனது அறிவிற் புகுந்து உள்ளத்தில் நிலை பெற்று, என் எண்ணத்தைத் திருத்தி, உடம்பிலும் இடங்கொண்டான், தனது அளவற்ற கருணையினால் என்னை ஆண்டு கொண்ட திருப்பூந்துருத்தி என்னும் திருப்பதியில் வீற்றிருந்த பெருமானது இனிய மங்கலப் பொருளாம் திருவடிகளை, நாயனைய இந்த அடியவன் அவன் கூத்தியற்றும் அழகிய பொன்னம்பலத்தில் கண்டு ஆனந்தமுற்றேன்.







தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment