Thursday, February 28, 2019

பிப்ரவரி-28 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

          
           வாழினுஞ் சாவினும் வருந்தினும் போய்
           வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
           தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
           போழிள மதிவைத்த புண்ணியனே
     இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
     அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

          ஒளிமிக்க செஞ்சடையில் கங்கை திகழப் பிறைமதியைத் தரித்து விளங்கும் புண்ணியனேநான் இப்பிறப்பில்; வாழ்ந்தாலும், இறந்தாலும், வருந்தினாலும், பாவக்குழியில் விழுந்தாலும் உனது திருவடியை மறக்கமாட்டேன்.    
           அவ்வாறு இருக்க எமக்குத் தேவைப் படுகின்ற பொருளைத் தந்து அருள் புரியவில்லையானால் அது உமது திருவருளுக்கு அழகாகுமோ?

திருவாசகம்

 மருளனேன் மனத்தை மயக்குற நோக்கி
  மறுமையோடு இம்மையும் கெடுத்த
 பொருளனே புனிதா பொங்கும் வாளரவம்
    கங்கை நீர் தங்கும் செஞ் சடையாய்
      தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்
   அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே.

     மருண்டு கி;டக்கின்ற எனது உள்ளத்தை மயக்கந் தீருமாறு திருவருட் கண்கொண்டு பார்த்து இம்மை, மறுமை என்னும் இரண்டும் உடைய பிறவியை யொழித்த மெய்ப் பொருளானவனே, தூய நன்மைத் திருவுருவே, ஒளி மிளிரச் சீறுகின்ற பாம்பும் கங்கையும் தங்கிய சிவந்த சடையுடையவனே, நான்மறைகளும் பொருந்திய திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் வீற்றிருந்த கருணையாளனே, அடியேன் உன்னை அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்றருள் செய்வாயாக.





தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  

Thevaram Thiruvasagam Song with Meaning

Wednesday, February 27, 2019

பிப்ரவரி-27 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


தொண்டனேன் பிறந்து வாளாத் தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய்
தெண்திரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

        அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனே! அறிவு மயமான ஞானச் செல்வனே! தெளிந்த நீர் அலைகள் படிந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ள திருக்கொண்டீச்சரம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள தலைவனே! உருத்தும் வினையால் இவ்வுலகில் பலகாலம் பிறந்து, இறந்து, யான் இளைப்புறுகின்றேன். உடம்பாகிய ஊன் பொதியைச் சுமந்து, வினைக்குழியில் வீழ்ந்து வருந்தும் யான் அதிலிருந்து மீளும் வழியினை அறிகிலேன். பிறவாநெறி பெற்றுய்வதற்குப் பெருமானே வழிகாட்டி உதவி, அஞ்சேல் என்று அபயம் அளித்துக் காப்பாயாக!

திருவாசகம்

சாதி குலம் பிறப்பு என்னும்
 கழிப்பட்டுத் தடுமாறும்
  ஆதமிலி நாயேனை அல்லல்
 அறுத்து ஆட்கொண்டு
 பேதை குணம் பிறர் உருவம்
          யான் எனது என் உரை மாய்த்துக்
  கோதில் அமுது ஆனானைக்
     குலாவு தில்லை கண்டேனே.

     சாதி, குலம், குடிப்பிறப்பு என்னும் பெரிய நீர்ச் சுழியில்  அகப்பட்டு, அறிவு தடுமாறி, நல்வழிப்படுத்துவார் இன்றி இருந்த நாயனைய என்னைத் துன்பம் நீக்கி ஆட்கொண்டு, எனது அறியாமையைக் களைந்து, பிறர் வடிவு கொண்டு வேறுபடுத்தும் இயல்புடன் கூடிய யான், எனது என்னும் செருக்கு அகற்றி அருள் செய்தான்குறையில்லாத அமுதமாம் அம்பலவாணனைத் தில்லைத் திருச்சபையில் கண்டேன்.










தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Tuesday, February 26, 2019

பிப்ரவரி-26 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


            மந்திர நான்மறை ஆகி வானவர்
            சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
            செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
            அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.

    மந்திரமாக விளங்குகின்ற நான்கு வேதங்களும் ஆகி, தேவர்களின் சிந்தையில் நிலவி இருந்து அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பதுதிருவைந்தெழுத்து ஆகும். இத்தகைய திருவைந்தெழுத்து வேள்வியை ஓம்பும் செம்மையுடைய அந்தண பெருமக்களின் மந்திரமாக இருந்து, காலச் சந்திகள் தோறும் ஓதப் பெறுவதாகும்.


திருவாசகம்

  தேன்பழச் சோலை பயிலும்;
      சிறு குயிலே இதுகேள் நீ
   வான்பழித்து இம்மண் புகுந்து
          மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
      ஊன்பழித்து உள்ளம் புகுந்து என்
       உணர்வது வாய ஒருத்தன்
      மான்பழித்து ஆண்ட மென் நோக்கி
        மணாளனை நீ வரக் கூவாய்.


      தேன் சுவைக் கனிகள் நிறைந்த பழச்சோலைகளில் பழகுகின்ற இளங்குயிலே, வானிலுள்ளோரை ஆட்கொள்ளக் கருதாது ஒதுக்கி, இம் மண்ணுலகத்திலே வந்து பக்குவப்பட்ட  மக்களை ஆட்கொண்டருளிய அருட்கொடையாளனாயும் உடம்பினைக் கருதாது எனது உள்ளத்தில் புகுந்து உனதறிவினில் இரண்டறக் கலந்த ஒப்பற்றவனாயும், நம்மை ஆட்கொண்டவனாயும் உள்ள மங்கை உமையவளின் மணவாளனை வரும்படி நீ கூவுவாய்.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Monday, February 25, 2019

பிப்ரவரி-25 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

      
      
       காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
       ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
       பூவினைக்கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
       தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.


    மலர்ச் சோலைகள் அமைத்தும், திருக்குளம் தோண்டியும், கனிந்த மனத்துடன், “முப்புரம் எரித்த ஈசனேஎனப் பாடியும், காலை, மாலை ஆகிய இரு வேளையும் பூப்பறித்து, மலரடி போற்றுவீராக. நாம் அனைவரும் அடியவர்களாய் ஈசனுக்குத் தொண்டு புரிபவர்கள். தீய வினையானது வந்து நம்மைத் தீண்டித் துன்பம் தராது. திருநீலகண்டம் துணை நின்று தடுத்துக் காக்கும்.



திருவாசகம்

     
            வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
            ஆரா அழுதாய் அமைந்து அன்றே - சீர் ஆர்
            திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய
            ஒருத்தன் பெருக்கும் ஒளி.

               

     திருவிளங்கும் சிறப்புமிகு திருப்பெருந்துறையில் விளங்கும் என் சிந்தை கவர்ந்த பெருமானிடமிருந்து உண்டான அருளொளியானது நான் மீண்டும் இம் மண்ணில் பிறவாத வழியினைக் காட்டி என் உள்ளத்தில் பாய்கின்ற தௌ;ளமுதாக அமைந்தது அவனை வாழ்த்தி வணங்குவோம்.













தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Sunday, February 24, 2019

பிப்ரவரி-24 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


          பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
          மறையார் தருவாய் மையினாய் உலகில்
          கறையார் பொழில்சூழ் கழிப்பாலை உளாய்
          இறையார் கழல் ஏத்த இடர் கெடுமே.

              கழிப்பாலை மேவிய பால்வண்ணரே! பிறை சூடிய பெம்மானே! செஞ்சடையப்பனே! வேத நாயகி இடங் கொண்ட வேதியனே! உன் கழல் மறவாது ஏத்தி வழிபடுகின்ற என் இடர்களை நீக்கி இன்னருள் தந்து காப்பாயாக! வாய்மையனே! வாயார உன் கழல்பாடி அதனாலேயே வந்த இடரையும் வருகின்ற இடரையும் போக்கிக் கொள்வேன்.


திருவாசகம்
  
 
   பண்டாய நான் மறையும் பால் அணுகா மால் அயனும்
   கண்டாரும் இல்லைக் கடையேனைத் - தொண்டாகக்
   கொண்டருளுங் கோகழி எம் கோமாற்கு நெஞ்சமே
   உண்டாமோ கைம்மாறு உரை.
               

      பண்டைப் பழமை மிக்க நான்கு வேதங்களும் அவனைச் சென்றடையத் திறனற்றவைநாரணணும் நான்முகனும் அவனைக் கண்டது கூட இல்லையாவரிலும் கீழ்ப்பட்ட என்னை அடிமையாகக் கொண்டருளிய எமது திருப்பெருந்துரை இறைவனுக்குச் செய்யக் கூடிய பதிலுபகாரம் ஏதேனும் உண்டோ? எனது நெஞ்சே நீ சொல்!








தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Saturday, February 23, 2019

பிப்ரவரி-23 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


             விருத்தனாகி வெண்ணீறு பூசிய
             கருத்தனார் கனலாட்டு உகந்தவர்
             நிருத்தனார் நெல்வாயில் மேவிய
             ஒருத்தனார் எமது உச்சியாரே.

            நெல்வாயில் மேவிய குணக்குன்றே! ஒப்பற்ற கனகமே! வெந்தநீறு பூசிய வேந்தனே! எல்லாப் பொருள்களுக்கும் மூத்தவனே! நெருப்பு தாங்கிய நின்மலனே! நடமாடும் நிருத்தனே! உச்சி நாதேஸ்வரப் பெருமானே! உன்னையே என் சென்னி உச்சியில் வைத்து இடையறாது வழிபடுவேன். என் கருத்துள் இருந்து அருள் செய்து காக்கப் பிரார்த்திக்கின்றேன்.

திருவாசகம்
 
   முத்தனை முதற் சோதியை முக்கண்
      அப்பனை முதல் வித்தினைச்
சித்தனைச் சிவலோகனைத் திரு
  நாமம் பாடித் திரிதரும்
     பக்தர்காள் இங்கே வம்மின் நீர் உங்கள்
  பாசந் தீரப் பணிமினோ
சித்தமார் தருஞ் சேவடிக்கண் நம்
    சென்னி மன்னித் திகழுமே.


       பற்றற்ற பரம்பொருளை, ஆதியாம் சோதிப் பிழம்பை, முக்கண்ணினனாகிய நம் அப்பனை, மூலவித்து ஆனவனை, ஞான வடிவானவனை, சிவபுரத்து வேந்தனை, பற்பல பெயர் கூறிப் பாடித் திரிகின்ற அன்பர்களே, இங்கே வாருங்கள். உங்களது பந்த பாசமெனும் கட்டு அறுகின்றவாறு அவனைப் புகழ்ந்து பணியுங்கள்அவனது திருவடிகளில் நம் சென்னி பொருந்தி விளங்கட்டும்.





தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Friday, February 22, 2019

பிப்ரவரி-22 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


           துன்பம் இல்லைத் துயர் இல்லையாம் இனி
           நம்பனாகிய நன்மணி கண்டனார்
           என்பொனார் உறைவேட்கள நன்னகர்
           இன்பன் சேவடி ஏத்தி இருப்பதே.

                      நெஞ்சே! நம்புவதற்கு உரியவரும், திருநீல கண்டத்தை உடையவரும், வழிபடும் நமக்கெல்லாம் பொன் போன்றவரும், திருவேட்கள நகரில் வீற்றிருந்து இன்பத்தை அருளுபவருமான பாசுபத நாதரின் சேவடியைத் தவறாமல் வணங்குவதைத் தலையாய கடமையாகக் கொண்டால், அதுவே இனி துன்பமும் துயரமும் உனக்கு இல்லையாகுமாறு செய்ய வல்லதாம்.



திருவாசகம்

  அறிவனே அமுதே அடி நாயினேன்
      அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது
       அறிவிலாமை அன்றே கண்டது ஆண்டநாள்
   அறிவனோ அல்லனோ அருள் ஈசனே.
               
       அனைத்தையும் அறிந்த, முற்றறிவுடைய முதல்வா, சாவா மருந்தே, மெய்ப்பொருளை அறிய வல்லவன் எனக்கருதியோ இந்த நாயேனை ஆட்கொண்டாய்என்னை ஆண்ட நாளில் அறிவில்லாமையை அல்லவா என்னிடம் நீ கண்டது. இனியும் மெய்ம்மைகளை அறிவேனோ, அறியேனோ, ஆண்டவனே நீ அருள் செய்ய வேண்டும்.





தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning


Thursday, February 21, 2019

பிப்ரவரி-21 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார், அமுதம் அமரர்க்கு அருளிச்
சூழ்தரு பாம்பு அரை ஆர்த்துச், சூலமோடு ஒண் மழு ஏந்தித்
தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித், தண் மதியம் மயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார், வேடகள நன்னகராரே.
                     திருவேட்கள நகரில் எழுந்தருளியுள்ள திருவே! ஆழமிக்க திருப்பாற்கடலில் தோன்றிய கொடிய வி~த்தை, பெருமானே! நீவிர் விரும்பி உண்டு, அமுதத்தை அமரர்க்கு அருளினீர். உம் கருணை எல்லையற்றது. பாம்பினை இடுப்பிற் சுற்றி, சூலமும் மழுவும் ஏந்தி, தாழ்ந்த சடையில் குளிர்ச்சியான சந்திரனை ஏற்று, அபயமளித்த கங்கையைக் கரந்து, தேவர்க்கும் நிலவுலகத்தார்க்கும் கருணை செய்த வேட்களத்து வேதனே! அப்பெருங் கருணையை எளியவனிடத்தும் இருக்கச் செய்து, இன்னலின்றிக் காக்கப் பிரார்த்திக்கின்றேன்.

திருவாசகம்


தனித்துணை நீநிற்க யான் தருக்கித்
தலையால் நடந்த
 வினைத்துணையேனை விடுதி கண்டாய்
வினையேனுடைய
மனத்துணையே என்தன் வாழ்முதலே
     எனக்கு எய்ப்பில் வைப்பே
  தினைத்துணை யேனும் பொறேன் துயர்
     ஆக்கையின் திண்வலையே.


     என் வாழ்முதலாகிய மெய்ப்பொருளே, உற்றுழி உதவும் அருள் நிதியே! உற்ற துணை நீ இருக்க நான் எனது வினையைத் துணையெனக் கொண்டு செருக்கித் திரிந்தேன்விதி வசத்தால் தலைகால் தெரியாமல் நடந்த என்னை நீ தள்ளிவிடாதேதுன்பத்துக்கு இருப்பிடமான உடல் என்னும் திண்ணிய வலையில் அகப்பட்டு நான் படும் அல்லல் பொறுக்க இயலவில்லை. ஆதலால் என் இறையே என்னைப் புறந்தள்ளாது ஆண்டு கொண்டருள்க.





தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

Wednesday, February 20, 2019

பிப்ரவரி-20 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


   கற்றாலுங் குழையுமாறு அன்றியே கருதுமா கருதுகிற்றார்க்கு
   எற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே நம்மை நாளுஞ்
   செற்றாட்டித் தருமனார் தமர் செக்கில் இடும் போது
                                தடுத்தாட்கொள்வான்
   பெற்றேறிப் புலியூர்ச் சிற்றம்பலத்து எம் பெருமானைப் பெற்றா மன்றே.

                    என் நெஞ்சே! வினைக்கீடாக உயிர் பறித்துச் செல்லும் அறவோனாகிய எமன், பாவங்களை அநுபவிக்கும் பொருட்டு, நம்மைச் செக்கிலிட்டு ஆட்டும் போது, துன்பமின்றிஅஞ்சேல்என்று சொல்லி அபயம் தருவதற்கு, ரி~பமீதேறி வரும் தில்லைப் பெருமானை பொருளாகப் பெற்றோமல்லவா? அப்பெருமானை மனமுருமி வழிபடு வோமாயின், நமக்கு எவ்வகையிலும் குறைவில்லையாம். ஆகவே புலியூர்ச் சிற்றம்பலத்துத் தலைவனை மறவாது போற்றி உய்வு பெறுவோமாக!


திருவாசகம்

      அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
  பாவமாயங் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
      நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
      சிவமானவா பாடித் தௌ;ளேணம் கொட்டாமோ
               

       வீடு பேறு அளிக்க இயலாத, பயனற்ற விண்ணவர்களின் நெறியில் அழுந்தா வண்ணம், மாயப் பிறவிதனில் இருந்து காத்து ஆட்கொண்ட பேரொளி, புதுமையான, செவ்விய நல்லறிவை நமக்குத் தந்தான்அதன் விளைவாக ஜீவ போதம் மறைந்து நாம் சிவபோதம் எனும் தன்மை எய்திய விதத்தைப் பாடித் தௌ;ளேணம் கொட்டுவோமாக.




தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning