தேவாரம்
கலையின் ஒலி மங்கையர்கள்
பாடல் ஒலி
ஆடல்கவின் எய்தி அழகார்
மலையின் நிகர் மாடம்
உயர்நீள் கொடிகள்
வீசுமலி மாகறல் உளான்
இலையின் மலிவேல் நுனைய
சூலம் வலன்
ஏந்தி எரிபுன் சடையினுள்
அலை கொள்புனல் ஏந்து
பெருமான் அடியை
ஏத்த வினை அகலுமிகவே.
பல கலைகளின் ஒலியும்,
பெண்கள் பாடல் ஒலியும், ஆடல்
ஒலியும், கொண்டு
விளங்குகின்ற பெரியமாடங்களின் மெல்
நீண்டகொடிகள் வீச திகழ்வது திருமாகறல்
என்னும் பதி. அங்கு எழுந்தருளியுள்ள
சிவபெருமான,; கூர்மையான சூலப்படையை வலக்கையில் ஏந்தி, நெருப்பு போன்ற
சிவந்த சடையின் மேல் அலை
வீசுகின்ற கங்கையை தரித்தவர்;. அப்பெருமானின்
திருவடியைப் புகழ்ந்து வழிபட வினைகள் யாவும்
நீங்கும்.
திருவாசகம்
நெறிசெய்தருளித் தன் சீரடியார் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை ஆண்ட பிரான் குணம்
பரவி
முறிசெய்து நம்மை முழுதும் உடற்றும்
பழ வினையைக்
கிறி செய்தவா பாடிப்
பூவல்லி கொய்யாமோ.
தனது சிறந்த அடியார்களின்
திருவடிகளுக்குத் தொண்டு செய்ய என்னை
இலக்காக்கி, வழிகாட்டி என்னை ஆண்ட பிரான்,
நம்மைச் சுற்றி நின்று துன்பம்
தரும் பழவினைகளைப் பொய்யாக்குகிறேன்
என்று முறிச்சீட்டு எழுதிக் காத்த முக்கண்ணன். அந்த முதல்வனின்
புகழ்பாடிப் பூக்கொய்து அவனது பொன்னடிகளைப் போற்றுவோம்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment