தேவாரம்
முன்னம் அடியேன் அறியாமையினால்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்கு
ஆளும் பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தம்கடன் ஆவதுதான்
அன்ன நடையார் அதிகைக்
கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
வீரட்டானத்தில் வீற்றிருக்கும் பெருமானே! முன்பு, அறியாமையால் இருந்தேன்.
அப்போது எனக்குச் சூலை தந்து, துன்பப்படுத்தி,
என்னை நலியுமாறு செய்தீர். இப்போது நான் தேவரீருக்கு
ஆட்பட்ட அடிமையானேன். அப்பிணி என்னைச் சுடுகின்றது.
தலைவராகிய தேவரீர், அடியவர்களுடைய துயரைத் தீர்ப்பதன்றோ செய்யத்
தகுந்த செயல்;. அதனைப் புரிந்தருளும்
வகையில் சூலை நோயைத் தீர்த்தருள்க.
திருவாசகம்
கையார் வளை சிலம்பக்
காதர் குழைஆட
மையார் குழல்புரளத் தேன்பாய
வண்டுஒலிப்பச்
செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்
கையானை எங்குஞ் செறிந்தானை
அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண்
அம்மானாய்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
If there is one Best Indian astrologer in Manhattan who can cater to all your needs and solve all the issues of your life related to personal and family matters, professional matters, love matters, and various other significant issues like black magic removal, negative energy removal, etc then he has to be the Famous Indian astrologer in Manhattan, Astrologer Pandit Ramdial Ji.
ReplyDeleteBest Indian Astrologer in Manhattan