Sunday, January 20, 2019

ஜனவரி-20 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert

தேவாரம்

           
             நன்று நாள்தொறும் நம்வினை போய் அறும்
             என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
             சென்றுநீர் திருவேட்களத்து உள்ளுறை
             துன்று பொற்சடையானை தொழுமினே.

         நம்முடைய பழைய வினைகள் நாள்தோறும் நம்மை விட்டு நன்றாக நீங்கும்;. என்றும் நாம் மகிழ்ச்சி பெருக வாழலாம். இவற்றை நமக்கு அருள்கின்ற, செறிந்த பொன்னிறச் சடையைக் கொண்டு திருவேங்கடத்தின் உள்ளே இருக்கின்ற இறைவனைத் தொழுவீராக.


திருவாசகம்

பூங்கமலத்து அயனொடு மால்
அறியாத நெறியானே
  கோங்கலர்சேர் குவி முலையாள்
 கூறா வெண் ணீறாடி
ஓங்கு எயில் சூழ் திருவாரூர்
    உடையானே அடியேன் நின்
பூங்கழல்கள் அவையல்லாது
  எவை யாதும் புகழேனே.


                  தாமரை மலரில் தங்கும் நான்முகனும், திருமாலும் அறியாத ஞானநெறியால் அடையப்படுகின்ற ஐயனே, கோங்கம் பூவையொத்த தனங்களையுடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனே, வெண்ணீறு பூசிய விடைப் பாகா, திருவாரூரில் உறைகின்ற திருவருளே, உன்னுடைய கழல் அணிந்த திருவடிகள் இரண்டையும் அல்லாது வேறு எவற்றையும் அடியேன் ஒரு சிறிதும் புகழமாட்டேன்உன்னையே வணங்கிப் போற்றுவேன்.


தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment