தேவாரம்
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள் ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராபப்ள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.
நன்மை உடையவனை, தீமையில்லாதவனை,
வெண்மையான காளை வாகனம் உடையவனை,
உமாதேவியை இடப்பாகம் கொண்டவனை, இயல்பாகவே செல்வத்தை யுடையவனை, திருச்சிராப்பள்ளி மலைமேல் இருப்பவனைப் போற்றி
வழிபட என் உள்ளம் மகிழ்ச்சியடையும்.
திருவாசகம்
நாடகத்தால் உன் அடியார்
போல் நடித்து நான்
நடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச் சீர் மணிக்குன்றே
இடையறா அன்பு உனக்கென்
ஊடகத்தே நின்றுருகத்
தந்தருள் எம் உடையானே.
என்னை உடையவனே, உனது
அன்பர்கள் நடுவில், அன்பில்லாதவனான நான், அன்புடையவன்
போல் வாஞ்சனையாக நடந்து காட்டி, அவர்களோடு
யானும் முத்திபேறு அடைய மிக அதிகமாகத்
துரிதப்படுகின்றேன். பொன்
நிறம் பொருந்திய மாணிக்க மலை போன்ற
ஐயனே, உன்பால் எப்போதும் குறைவுறாத
அன்பினால் என் நெஞ்சம் உருக
உதவியருள்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment