தேவாரம்
தோடுலா மலர்கள் தூவித்
தொழுதெழு மார்க்கண்டேயன்
வீடுநாள் அணுகிற்; றென்று மெய்கொள்வான் வந்த
காலன்
பாடுதான் செல்லும் அஞ்சிப் பாதமே சரண
மென்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு
மேவி னாரே.
இதழ்களோடு கூடிய மலர்களைச் சிவபெருமான்
திருவடிகளில் தூவித் தொழுத மார்க்கண்டேயன்
உயிரைப் பறித்துக் கொள்வதற்குரிய காலம் வந்ததென்று யமன்
அவனை அணுகினான். மார்க்கண்டேயன், யமனுக்கு அஞ்சிச் சிவபெருமான் திருவடிகளே
சரணமெனச் சேர்ந்தான். சாய்க்காட்டில் உள்ள பெருமான், யமனைக்
காலால் உதைத்து மார்க்கண்டேயனை காத்தார்.
திருவாசகம்
பால்நினைந்
தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியே
னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி
பெருக்கி
உலப்பிலா
ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே
சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
எம்பெருமானே, என்னைக் காக்கும் பொருட்டுப்
பெற்ற தாயினும் மேலாக அன்பு காட்டி
என்னை விட்டுப் பிரியாது இருந்து, வற்றாத இன்பத்தைப் பொழிந்து,
போகுமிடமெல்லாம் என் உடன் திரிந்த
செல்வமே! குழந்தையிடம் பெற்றவள் கொள்கின்ற பரிவினும் மேலான கருணையுடைய நீ,
என்னுடைய உடல் உணர்வை ஒடுக்கி,
ஞானஒளியை உள்ளத்தே வளர்த்து அழிவற்ற சிவானந்தப் பேற்றினைத்
தந்தாய் உன்னை நான் உறுதியாகப்
பற்றினேன். காத்தருள்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment