Wednesday, February 27, 2019

பிப்ரவரி-27 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


தொண்டனேன் பிறந்து வாளாத் தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய்
தெண்திரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

        அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனே! அறிவு மயமான ஞானச் செல்வனே! தெளிந்த நீர் அலைகள் படிந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ள திருக்கொண்டீச்சரம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள தலைவனே! உருத்தும் வினையால் இவ்வுலகில் பலகாலம் பிறந்து, இறந்து, யான் இளைப்புறுகின்றேன். உடம்பாகிய ஊன் பொதியைச் சுமந்து, வினைக்குழியில் வீழ்ந்து வருந்தும் யான் அதிலிருந்து மீளும் வழியினை அறிகிலேன். பிறவாநெறி பெற்றுய்வதற்குப் பெருமானே வழிகாட்டி உதவி, அஞ்சேல் என்று அபயம் அளித்துக் காப்பாயாக!

திருவாசகம்

சாதி குலம் பிறப்பு என்னும்
 கழிப்பட்டுத் தடுமாறும்
  ஆதமிலி நாயேனை அல்லல்
 அறுத்து ஆட்கொண்டு
 பேதை குணம் பிறர் உருவம்
          யான் எனது என் உரை மாய்த்துக்
  கோதில் அமுது ஆனானைக்
     குலாவு தில்லை கண்டேனே.

     சாதி, குலம், குடிப்பிறப்பு என்னும் பெரிய நீர்ச் சுழியில்  அகப்பட்டு, அறிவு தடுமாறி, நல்வழிப்படுத்துவார் இன்றி இருந்த நாயனைய என்னைத் துன்பம் நீக்கி ஆட்கொண்டு, எனது அறியாமையைக் களைந்து, பிறர் வடிவு கொண்டு வேறுபடுத்தும் இயல்புடன் கூடிய யான், எனது என்னும் செருக்கு அகற்றி அருள் செய்தான்குறையில்லாத அமுதமாம் அம்பலவாணனைத் தில்லைத் திருச்சபையில் கண்டேன்.










தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment