தேவாரம்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும்
அவரிடர்
கடி கணபதி வர
அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை
இறையே
மிகுதியாய் கொடுப்பவரும், அழகிய வடிவினருமான வள்ளல்கள்
வாழும் திருவலிவலத்தில் அமர்ந்தவன், இறைவன் சிவபெருமான். அவன்,
உமையம்மை பெண்யானை வடிவு கொள்ளத் தான்
ஆண் யானை வடிவினனாகி நின்றான்.
அவன் தம் திருவடிகளை வழிபடும்
அடியவர்தம் இடர்கள் நீங்க கணபதியைத்
தோன்றச் செய்தான்.
திருவாசகம்
தெங்கு
உலவு சோலைத் திரு உத்தரகோசமங்கை
தங்கு உலவு சோதித்
தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு
எம் தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணி கொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம் பரவிப்
பொங்குலவு பூண் முலையீர் பொன்னூசல்
ஆடாமோ.
தென்னை மரங்கள் நிறைந்த
சோலை சூழ்ந்த திருஉத்தரகோசமங்கைப் பதியில்
ஒப்பற்ற ஒளி வடிவோடு எழுந்தருளி
விளங்குகின்ற எங்கள் இறைவன். எங்கள் பிறவியைத் தொலைத்து
எம்போன்றவரையும் ஆட்கொள்ளும் மங்கையும் தானுமாகத் தோன்றி ஏவல் கொண்டருளிய,
தேன் சிந்தும் கொன்றை மாலை அணிந்த
சடை முடியுடைய சிவபெருமானது சிறப்புக்களைப் பாடிப் பரவி ஊஞ்சலாடுவோம்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment