தேவாரம்
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறல் உளான்
கொங்குவிரி கொன்றையோடு கங்கைவளர்
திங்களணி
செஞ்சடையினான்
செங்கண்விடை அண்ணலடி சேர்பவர்கள்
தீ வினைகள் தீரும்
உடனே.
செழிப்பாக வளர்கின்ற வயல்களில் வேலை செய்யும் பெண்கள்
பாடி ஆடுகின்ற ஒலியும், மேகத்தைத் தொடுகின்ற உயர்ந்தகொடிகள் கட்டப் பட்ட மாடங்களும்,
பெரிய சோலைகளும் உடைய திருமாகறல் என்னும்
பதியில் வீற்றிருக்கின்ற சிவபெருமான், தேன் சொரிகின்ற கொன்றை,
கங்கை, சந்திரன் இவற்றை சூடிய சடையை
உடையவன். சிவந்த கண்களை உடைய
காளை வாகனத்தில் ஏறிவரும் பெருமான். அவனது திருவடியைச் சேர்பவர்களது
தீவினைகள் யாவும் உடனே நீங்கும்.
திருவாசகம்
இன்பம் பெருக்கி இருள்
அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வு அறுத்துச்
சோதியாய் - அன்பு அமைத்துச்
சீர்ரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.
வணங்குகிறேன்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment