தேவாரம்
குறைவளை அதுமொழி குறைவொழி
நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை
அவளொடுங்
கறைவளர் பொழிலணி கழுமல
வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே.
மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை,
நெஞ்சமே! விடுவாயாக. நிறைந்த வளையலை முன்கையில்
அணிந்து மேவும் உமாதேவியாரை உடனாகக்
கொண்டு, பொழில் திகழும் கழுமலத்தில்
பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய
ஈசன், வீற்றிருக்கின்றார்;. அவர் நம் மனக்குறையை
நீக்குவார்.
திருவாசகம்
பவன் எம்பிரான் பனி
மாமதிக்
கண்ணி விண்ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை
ஆண்டு
கொண்டான் என்
சிறுமை கண்டும்
அவன் எம்பிரான் என்ன
நான்
அடியேன் என்ன இப்பரிசே
புவன் எம்பிரான் தெரியும்
பரிசு ஆவது இயம்புகவே.
எம் பெருமான், அனைத்தும்
தோன்றுவதற்கு இடமானவன். சிறப்புடைய
திங்களைத் தலை மீது அணிந்த
தேவர் தலைவன். அனைவரையும்
காத்துப் புரந்தருபவன். இறுதியில்
எல்லாவற்றையும் ஒடுக்குபவனாகிய தூயவன். அத்தகைய பெருமான்,
சிற்றறிவும், சிறுசெயலும் உடைய எனது தன்மையை
அறிந்தும் என்னை ஆட்கொண்டான்.
அவன் தானாகத் தோன்றிய சுயம்பு. நான்
அவனது அடியான். இதுவே
நான் அறிந்தமுறை. அதைப்
போற்றி வணங்குவேன்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment