தேவாரம்
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன்
அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்டமில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே.
பூக்களில் சிறப்புடையது தாமரை மலர். பசுவின்
பயனுள்ள தன்மை யாவது, ஈசனுக்குத்
திருமுழுக்குச் செய்ய பஞ்சகௌவியத்தை வழங்கும்
பெருமை. அரசனுக்கு சிறப்பானது நீதி வழங்குவதில் விருப்பு-வெறுப்பு இன்றி
ஆட்சிசெய்யும் முறைமை. அவ்வாறே, நாவினுக்கு
உரிய தன்மை யானது, நமச்சிவாய
என்னும் திருவைந்தெழுத்தை ஓதுதல் ஆகும்.
திருவாசகம்
பச்சைத்தால்
அரவாட்டி
படர் சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே
அடியேனை உய்யக் கொண்டு
எச்சத்தார் சிறு தெய்வம்
ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா
றுய்ந்த வாறு
அன்றே உன்திறம் நினைந்தே.
பசுமை நிறமுடைய நாக்கினைக்
கொண்ட பாம்பை ஆட்டுபவனே. விரிந்த
சடையுடையானே, உனது தாமரைத் திருவடிகளைத்
தலைமேல் கொள்ளும் பேரன்பர்களின் தலைவனே, என்னை உய்வித்த
உனது பெருமை அறியாதவர்கள் சிறு
தெய்வங்களாகிய தேவதைகளை யாகங்கள் செய்து வந்திக்கின்றனர்.
என்னை ஆட்கொண்ட உன் திறத்தை நினைந்து
எனது சித்தத்தை உன்னிடம் செலுத்திப் பிறவிப் பொருங்கடலில் வீழாது
உய்வடைந்தேன் நான்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment