தேவாரம்
காவினை இட்டும் குளம்பல
தொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று
இருபொழுதும்
பூவினைக்கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா
திருநீலகண்டம்.
மலர்ச் சோலைகள் அமைத்தும்,
திருக்குளம் தோண்டியும், கனிந்த மனத்துடன், “முப்புரம்
எரித்த ஈசனே” எனப் பாடியும், காலை,
மாலை ஆகிய இரு வேளையும்
பூப்பறித்து, மலரடி போற்றுவீராக. நாம்
அனைவரும் அடியவர்களாய் ஈசனுக்குத் தொண்டு புரிபவர்கள். தீய
வினையானது வந்து நம்மைத் தீண்டித்
துன்பம் தராது. திருநீலகண்டம் துணை
நின்று தடுத்துக் காக்கும்.
திருவாசகம்
வாரா வழியருளி வந்தெனக்கு
மாறின்றி
ஆரா அழுதாய் அமைந்து
அன்றே - சீர் ஆர்
திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.
திருவிளங்கும் சிறப்புமிகு திருப்பெருந்துறையில் விளங்கும் என் சிந்தை கவர்ந்த
பெருமானிடமிருந்து உண்டான அருளொளியானது நான்
மீண்டும் இம் மண்ணில் பிறவாத
வழியினைக் காட்டி என் உள்ளத்தில்
பாய்கின்ற தௌ;ளமுதாக அமைந்தது
அவனை வாழ்த்தி வணங்குவோம்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment