தேவாரம்
கைம்மக ஏந்திக் கடுவனொடு
ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறுஞ்
சிராப்பள்ளி
வெம்முகவேழத்து ஈருரி போர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன்
வைத்தல் பழியன்றே.
பெண் குரங்கு தன்
குட்டியை அணைத்துக் கொண்டு ஆண் குரங்குடன்
பிணக்குற்று கரிய மூங்கில் மேல்
ஏறும் தன்மை யுடையது. சிராப்பள்ளி.
அத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே! கொடிய யானையின் தோலை
உரித்துப் போர்த்திக் கொண்ட விகிர்தனே! நாகத்தைச்
சந்திரனுடன் பொருந்துமாறு வைத்த நின் செயல்
பழியாகாது.
திருவாசகம்
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்
துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு
என்னுடைய எம்பிரான் என்றென்று
அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்று அருளாயே.
திருத்தமாகிய சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையில்
குருந்த மரத்தடியில் குரு வடிவினாய் நீ
வீற்றிருந்த கோலத்தை நினைந்து அதை
மீட்டும் காணப் பெறாது வருந்தும்
அடியவன், என்னை அடிமை கொண்ட
தலைவன் நீயே எனக் கருதி,
உன்னை ஐயனே, அரிய தவ
வடிவானவனே, துன்ப அலைகள் மிகுந்த
பிறவிக் கடலில் நின்று என்னைக்
காத்து, கயிலை போகும் வழி
இதுதான் என்று காட்டியருள்க என்று
இறைஞ்சுகிறேன். ஈசனே
அருள் செய்வாய்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment