தேவாரம்
படைக்கலமாக
உன் நாமத்து எழுத்து அஞ்சு
என் நாவிற் கொண்டேன்
இடைக்கலம்
அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும்
போகேன் தொழுது வணங்கித் தூநீறு
அணிந்து உன்
அடைக்கலம்
கண்டாய் அணி தில்லைச் சிற்றம்பலத்து
அரனே.
பெருமானே! தீங்கு நேராதவாறு என்னைக்
காத்துக் கொள்வதற்குரிய படைக்கலமாக உன் திருவைந் தெழுத்தையே
(பஞ்சாட்சரம்) எப்போதும் என் நாவில் கொண்டு,
நாளும் பாராயணம் செய்தவாறே ஏழு பிறவிக்கும் உனக்கே
பணி செய்வேன். நீ என்னை வெறுத்துத்
தள்ளினாலும், நான் உன்னை விட்டு
அகல மாட்டேன். திருச்சிற்றம்பலத்து அரனே! உன்னையே தொழுது
வணங்கி, மேலான திரு நீற்றை
அணிந்து எந்நாளும் வழிபடுகின்ற இந்த அடியவனை அடைக்கலப்
பொருளாக ஏற்றுக் கொள்வாயாக!
திருவாசகம்
வெய்ய வினை இரண்டும்
வெந்து அகல மெய்யுருகிப்
பொய்யும் பொடி ஆகாது என்
செய்கேன் - செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவாது இருந்தேன் மனத்து.
செம்மை சேர் சிறப்புப்
பொருந்திய திருப்பெருந்துறை அண்ணலாம், தேன் போன்று இன்பம்
தருகின்ற செழுஞ்சுடரை, என் உள்ளத்தே எழுந்தருளச்
செய்யாதிருந்தேன். எனது கொடிய வினை
இரண்டும் வெந்தொழியுமாறு உடம்பு உருகி, இப்பொய்
வாழ்வும் நீற்றுப் போகாதிருக்கிறதே என் செய்வேன். இறைவா
உன்னை அயரா அன்பினால் வழிபட
அருள் செய்வாய்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment