Monday, February 18, 2019

பிப்ரவரி-18 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


           
            நீதியை நிறைவை மறை நான்குடன்
            ஓதியை ஒருவர்க்கும் அறிவொணாச்
            சோதியைச் சுடர்ச் செம்பொனின் அம்பலத்து
            ஆதியை அடியேன் மறந்து உய்வனோ.

         அம்பலத்து ஆடும் ஆதியே! நீதியாகவும், நிறைவுடையதாகவும், நான்மறையாகவும், யாவராலும் அறிய முடியாத பேரொளியாகவும், ஞானமாகவும் விளங்குகின்ற தெய்வமே! சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற பொன்னம்பலத்து முழுமுதலே! உன்னை மறந்து எங்ஙனம் வாழ்வேன்? உன்னை மறந்தால் உய்வில்லையே!        


திருவாசகம்

             
               வேண்டும் நின் கழல் கண் அன்பு
         பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே
               ஆண்டுகொண்டு நாயினேனை
 ஆவ என்று அருளு நீ
               பூண்டு கொண்டு அடியனேனும்
         போற்றி போற்றி என்றும் என்றும்
               மாண்டு மாண்டு வந்து வந்து
   மன்ன நின் வணங்கவே.



      ஐயனே. அரசே, உன்னிடத்தில் நாயேன் பொய்க் கலப்பில்லாத அன்பு கொண்டு இருத்தல் வேண்டி அடியேனுக்கு ஐயோ என்று இரங்கி அருள்கஉன் திருவடிகளைத் தலை மேல் கொண்டு உன்னை வாழ்த்தி, வணங்கி மீண்டும் மீண்டும் பிறவி வந்தாலும் உன்னையே வணங்குதற்கு விரும்பும் என் விருப்பம் நிறைவேறுமாறு அருள் செய்க.





தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment