தேவாரம்
நனவிலுங்
கனவிலும் நாளுந் தன்னொளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும்
நின்மலன்
கனைகடல் வையகம் தொழு
கருக்குடி
அனல் எரியாடும் எம்
அடிகள் காண்மினே.
நினைவுள்ள காலத்தும் கனவு நிலையிலும் மறவாது
வழிபடுகின்ற என்னை நாடி வந்து
அருள் புரியும் நின்மலனே! இவ்வுலகில் அடியார்கள் மறவாது மனத்திருத்தித் தொழுது
வழிபடுகின்ற திருக்கருக்குடியே நீ எழுந்தருளியுள்ள தலம்
என்று அறிந்து, நாவாரத் துதித்துப் போற்றுகின்றேன்.
அனல் ஏந்தியாடும் அம்பலவாணரே! அண்டினோரைக் காக்கும் அடிகளே! கருக்குடி மேய
கற்பகமே! நற்பதமே! என்றும் உம்மை ஏத்தி
வழிபடும் பேற்றை அருள்வீராக!
திருவாசகம்
பிறிவு அறியா அன்பர்
நின் அருள்
பெய் கழல் தாள்
இணைக் கீழ்
மறிவு அறியாச் செல்வம்
வந்து
பெற்றார் உன்னை வந்திப்பதோர்
நெறி அறியேன் நின்னையே
அறியேன் நின்னையே அறியும்
அறிவு அறியேன் உடையாய்
அடியேன் உன் அடைக்கலமே.
எம் பெருமானே. நின்
திருவருளை விட்டுப் பிரியாத நின் மெய்யடியார்கள்,
கழல் அணிந்த உனது திருவடியின்
கீழே வந்தடைந்து பிறவியில்லாத பேரின்பத்தைப் பெற்றனர். நான்
உன்னை வழிபடுகின்ற வழியினை அறியமாட்டேன்.
உன்னையே முழுவதும் அறியமாட்டேன். அறிவதற்குரிய சிவஞான யோகமும் அறிய
மாட்டேன். என்னை உடையவனே அடியேன்
உன் அடைக்கலம்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment