தேவாரம்
செல்வ நெடுமாடஞ் சென்று
சேண் ஓங்கிச்
செல்வமதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம்
மேய
செல்வன் கழல் ஏத்தும்
செல்வம் செல்வமே.
செல்வச் சிற்றம்பலத்துச் செம்பொருளே!
உன் திருவடிகளைத் தொழுகின்ற செல்வமே, வாழ்வில் உண்மையான செல்வம் என்பதை உணர்ந்து
உன் மலரடிகளைப் பணிகின்றேன். எளியேனுக்கு அருள் புரிவீராக! தில்லைக்
குரு மணியே! நடராசத் தெய்வ
மணியே! உன் திருவடிகளையே என்றும்
பணிந்து ஏத்தும் பேற்றினையும் தந்தருள்வாயாக!
திருவாசகம்
அளவறுப்பதற்கு
அரியவன் இமையவர்க்கு
அடியவர்க்கு எளியான் நம்
களவறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள்
கசிந்து உணர்ந்திருந்தேயும்
உளகறுத்துனை நினைந்துளம் பெருங்களன்
செய்ததும்
இலை நெஞ்சே
பளகறுத்து உடையான் கழல் பணிந்திலை
பரகதி புகுவானே.
விண்ணவர்களாலும் அளந்து அறிய முடியாத
பெருமையுடையவன், அடியவர்க்கு எளிதில் அருள்
புரிபவன். அவன்
நம்முடைய வஞ்சப் பிறவியை ஒழித்து
உள்ளத்தில் நிலைத்து நின்ற தன்மையை உணர்ந்திருந்தபோது
மனமே நீ அவன் கருணையை
எண்ணிக் கசிந்திருக்க வேண்டும். பொறி
நிகழ்ச்சிகளை வெறுத்து உள்ளத்தை அவனுக்கு உறைவிடமாகச் செய்திருக்க வேண்டும். மேலான
வீட்டு நெறி அடைவதன் பொருட்டு
மனமே.,அங்ஙனம் செய்யாத உன்
இயல்புதான் என்னே! இனியாகிலும் அவன்
அருள் வேண்டி இறைஞ்சுக.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment