தேவாரம்
துன்பம் இல்லைத் துயர்
இல்லையாம் இனி
நம்பனாகிய நன்மணி கண்டனார்
என்பொனார் உறைவேட்கள நன்னகர்
இன்பன் சேவடி ஏத்தி
இருப்பதே.
நெஞ்சே! நம்புவதற்கு உரியவரும்,
திருநீல கண்டத்தை உடையவரும், வழிபடும் நமக்கெல்லாம் பொன் போன்றவரும், திருவேட்கள
நகரில் வீற்றிருந்து இன்பத்தை அருளுபவருமான பாசுபத நாதரின் சேவடியைத்
தவறாமல் வணங்குவதைத் தலையாய கடமையாகக் கொண்டால்,
அதுவே இனி துன்பமும் துயரமும்
உனக்கு இல்லையாகுமாறு செய்ய வல்லதாம்.
திருவாசகம்
அறிவனே அமுதே அடி
நாயினேன்
அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது
அறிவிலாமை அன்றே கண்டது ஆண்டநாள்
அறிவனோ அல்லனோ அருள்
ஈசனே.
அனைத்தையும் அறிந்த, முற்றறிவுடைய முதல்வா,
சாவா மருந்தே, மெய்ப்பொருளை அறிய வல்லவன் எனக்கருதியோ
இந்த நாயேனை ஆட்கொண்டாய்.
என்னை ஆண்ட நாளில் அறிவில்லாமையை
அல்லவா என்னிடம் நீ கண்டது. இனியும்
மெய்ம்மைகளை அறிவேனோ, அறியேனோ, ஆண்டவனே நீ அருள்
செய்ய வேண்டும்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment