Tuesday, February 5, 2019

பிப்ரவரி-5 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


   
    கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
    தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
    மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி யிராப்பகலும்
    நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

     ஆரவாரித்து எழுகின்ற கடலில் தோன்றிய நஞ்சை தினையளவாக்கி கழுத்தில் வைத்த தேவரே! உம்மை மனத்தில் இரவு பகலாக பாடி ஆடி மகிழ்பவரது  துன்பங்களை நீக்குவீராக, நெடுங்களம் மேய நின்மலனே!


திருவாசகம்

 
     பண்ணார்ந்த மொழி மங்கை பங்காநின் ஆளானார்க்கு
     உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
     மண்ணார்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வாவென்னக்
     கண்ணார உய்ந்தவாறு அன்றேஉன் கழல்கண்டே.

                                பண் நிறைந்த சொல்லுடைய உமையம்மை பாகனேஉன் அடிமையானவர்கட்கு நுகர்வதற்குற்ற அமுதம் போன்றவனே, முதல்வனே, மண்ணுலகிற் பொருந்திய என் பிறவிகளைத் தொலைத்து அடியவனை ஆள்கின்றவனே, நீ என்னை வாவென்று அழைத்து, உன் திருவடிக் காட்சி தந்து இம்மண்ணிடைத் தோன்றிய என் பிறப்பை அறுத்துக் கொள்ள அருள் செய்தாய், உன்னை வணங்குகிறேன்.











தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning


No comments:

Post a Comment