தேவாரம்
பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
மறையார் தருவாய் மையினாய்
உலகில்
கறையார் பொழில்சூழ் கழிப்பாலை
உளாய்
இறையார் கழல் ஏத்த
இடர் கெடுமே.
கழிப்பாலை மேவிய பால்வண்ணரே! பிறை
சூடிய பெம்மானே! செஞ்சடையப்பனே! வேத நாயகி இடங்
கொண்ட வேதியனே! உன் கழல் மறவாது
ஏத்தி வழிபடுகின்ற என் இடர்களை நீக்கி
இன்னருள் தந்து காப்பாயாக! வாய்மையனே!
வாயார உன் கழல்பாடி அதனாலேயே
வந்த இடரையும் வருகின்ற இடரையும் போக்கிக் கொள்வேன்.
திருவாசகம்
பண்டாய நான் மறையும்
பால் அணுகா மால் அயனும்
கண்டாரும் இல்லைக் கடையேனைத் - தொண்டாகக்
கொண்டருளுங் கோகழி எம் கோமாற்கு
நெஞ்சமே
உண்டாமோ கைம்மாறு உரை.
பண்டைப் பழமை மிக்க
நான்கு வேதங்களும் அவனைச் சென்றடையத் திறனற்றவை. நாரணணும்
நான்முகனும் அவனைக் கண்டது கூட
இல்லை. யாவரிலும்
கீழ்ப்பட்ட என்னை அடிமையாகக் கொண்டருளிய
எமது திருப்பெருந்துரை இறைவனுக்குச் செய்யக் கூடிய பதிலுபகாரம்
ஏதேனும் உண்டோ? எனது நெஞ்சே
நீ சொல்!
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment