தேவாரம்
ஆழ்தரு
மால்கடல் நஞ்சினை யுண்டார், அமுதம்
அமரர்க்கு அருளிச்
சூழ்தரு
பாம்பு அரை ஆர்த்துச், சூலமோடு
ஒண் மழு ஏந்தித்
தாழ்தரு
புன்சடை ஒன்றினை வாங்கித், தண்
மதியம் மயலே ததும்ப
வீழ்தரு
கங்கை கரந்தார், வேடகள நன்னகராரே.
திருவேட்கள நகரில் எழுந்தருளியுள்ள திருவே!
ஆழமிக்க திருப்பாற்கடலில் தோன்றிய கொடிய வி~த்தை, பெருமானே! நீவிர்
விரும்பி உண்டு, அமுதத்தை அமரர்க்கு
அருளினீர். உம் கருணை எல்லையற்றது.
பாம்பினை இடுப்பிற் சுற்றி, சூலமும் மழுவும்
ஏந்தி, தாழ்ந்த சடையில் குளிர்ச்சியான
சந்திரனை ஏற்று, அபயமளித்த கங்கையைக்
கரந்து, தேவர்க்கும் நிலவுலகத்தார்க்கும் கருணை செய்த வேட்களத்து
வேதனே! அப்பெருங் கருணையை எளியவனிடத்தும் இருக்கச்
செய்து, இன்னலின்றிக் காக்கப் பிரார்த்திக்கின்றேன்.
திருவாசகம்
தனித்துணை
நீநிற்க யான் தருக்கித்
தலையால்
நடந்த
வினைத்துணையேனை விடுதி கண்டாய்
வினையேனுடைய
மனத்துணையே
என்தன் வாழ்முதலே
எனக்கு எய்ப்பில் வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன் துயர்
ஆக்கையின் திண்வலையே.
என் வாழ்முதலாகிய மெய்ப்பொருளே,
உற்றுழி உதவும் அருள் நிதியே!
உற்ற துணை நீ இருக்க
நான் எனது வினையைத் துணையெனக்
கொண்டு செருக்கித் திரிந்தேன். விதி
வசத்தால் தலைகால் தெரியாமல் நடந்த
என்னை நீ தள்ளிவிடாதே.
துன்பத்துக்கு இருப்பிடமான உடல் என்னும் திண்ணிய
வலையில் அகப்பட்டு நான் படும் அல்லல்
பொறுக்க இயலவில்லை. ஆதலால் என் இறையே
என்னைப் புறந்தள்ளாது ஆண்டு கொண்டருள்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment