Friday, February 8, 2019

பிப்ரவரி-8 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

        

       
         துறை மல்கு சாரர் சுனை மல்கு நீலத்திடை வைகிச்
         சிறை மல்கு வண்டுந்தும்பியும்; பாடுஞ் சிராப்பள்ளிக்
         கறை மல்கு கண்டன் கனலெரியாடுங் கடவுள் எம்
         பிறை மல்கு சென்னி யுடையவன் எங்கள் பெருமானே.

   சிராப்பள்ளிக் குன்றின் சாரல் சுனைகளில் நீலவண்ண மலர்கள் விளங்க, சிறகுகளையுடைய வண்டும், தும்பியும் பாட, நீலகண்டக் கடவுளாகிய எம்பரமன் சந்திரனைத் தலையில் சூடி, நெருப்பைக் கையில் கொண்டு ஆடுபவன்


திருவாசகம்
            
              
               பரிந்து வந்து பரமானந்தம்
      பண்டே அடியேற்கு அருள்செய்யப்
   பிரிந்து போந்து பெருமா நிலத்தில்
   அருமால் உற்றேன் என்றென்று
    சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர்
         உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பாய்ப்
    புரிந்து நிற்பதென்று கொல்லோ என்
    பொல்லா மணியைப் புணர்ந்தே.


                        என் மேல் பரிவு கொண்டு குருவாய் வந்து பராமானந்தத்தை எனக்கருளினான் எம் ஈசன்அவனைப் பிரிந்து இவ்வுலகில் நின்று நீக்குதற்கரிய மயக்க முற்றேனேஅதனை எண்ணி, எண்ணிக் கண்ணீர் சிந்தி, உள்ளம் உருகி, மயிர்க் கூச்செறிய மகிழ்ந்து, அன்போடு அந்தப் மாசற்ற மாணிக்கம் போன்றவனைத் தழுவி நிற்பது எந்நாளோ





தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment