தேவாரம்
கண்டு கொள்ளரி யானைக்
கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை
கேட்டிரேல்
கொண்ட பாணி கொடு
கொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரை துன்னிலுஞ்
சூழலே.
யாராலும் காண்பதற்கு அரியவராகிய சிவபெருமானுக்கு நான் அடிமை பூண்டவன்.
இதனை நன்கு கேழுங்கள். ஈசனின்
திருப்புகழைப் பாடும் தொண்டர்கள், கைகளால்
தாளம் இடுவர்; கொடுகொட்டி என்னும்
வாத்தியக் கருவியை முழக்குவர். இத்தகைய
அடியவர்களிடம் காலதூதர்களே நீங்கள் அணுகாதீர்கள்.
திருவாசகம்
பெற்றி பிறர்க்கரிய பெம்மான்
பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித்
தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்
தொல்புகழே
பற்றி இப்பாசத்தைப் பற்றற
நாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.
அன்பர் அன்றிப் பிறரால்
இன்ன தன்மையன் என்று அறிந்து கொள்ள
முடியாதவன். திருப்பெருந்துறை
உடையவன். வெற்றிக்
குதிரைமேல் எழுந்தருளித் தன்னடியார்களது குறை களைந்து, குணங்களைப்
பாராட்டிச் சீராட்டி ற்றுக் கொள்பவன். உயிரைச் சூழ்ந்து பற்றி
நின்ற உறவு என்னும் பாசத்தை
அறுப்பவன். அவனது பண்டைப் புகழினைப்
பற்றிப் பிடித்து நம்மைப் பிணித்திருக்கும் வினைக்
கட்டினை அறவே ஒழிப்போம். அதற்கு அப்பெருமானது பற்று
ஒன்றே உற்ற உபாயமாதலால் அவன்
புகழ்பாடுவோம்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment