Tuesday, February 26, 2019

பிப்ரவரி-26 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


            மந்திர நான்மறை ஆகி வானவர்
            சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
            செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
            அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.

    மந்திரமாக விளங்குகின்ற நான்கு வேதங்களும் ஆகி, தேவர்களின் சிந்தையில் நிலவி இருந்து அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பதுதிருவைந்தெழுத்து ஆகும். இத்தகைய திருவைந்தெழுத்து வேள்வியை ஓம்பும் செம்மையுடைய அந்தண பெருமக்களின் மந்திரமாக இருந்து, காலச் சந்திகள் தோறும் ஓதப் பெறுவதாகும்.


திருவாசகம்

  தேன்பழச் சோலை பயிலும்;
      சிறு குயிலே இதுகேள் நீ
   வான்பழித்து இம்மண் புகுந்து
          மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
      ஊன்பழித்து உள்ளம் புகுந்து என்
       உணர்வது வாய ஒருத்தன்
      மான்பழித்து ஆண்ட மென் நோக்கி
        மணாளனை நீ வரக் கூவாய்.


      தேன் சுவைக் கனிகள் நிறைந்த பழச்சோலைகளில் பழகுகின்ற இளங்குயிலே, வானிலுள்ளோரை ஆட்கொள்ளக் கருதாது ஒதுக்கி, இம் மண்ணுலகத்திலே வந்து பக்குவப்பட்ட  மக்களை ஆட்கொண்டருளிய அருட்கொடையாளனாயும் உடம்பினைக் கருதாது எனது உள்ளத்தில் புகுந்து உனதறிவினில் இரண்டறக் கலந்த ஒப்பற்றவனாயும், நம்மை ஆட்கொண்டவனாயும் உள்ள மங்கை உமையவளின் மணவாளனை வரும்படி நீ கூவுவாய்.






தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment