தேவாரம்
பன்னிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்:
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருள்
சுடரொப்பாய்:
மண்ணிடை அடியார்கள் மனத்திடர்
வாராமே
விண்ணிடைக்
குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சிவபெருமானே! பண்களிடையே பொருந்த நிற்கும் தமிழைப்
போன்றவன் நீ. பழத்தினிடையே அமைந்த
சுவையைப் போன்றவன் நீ. கண்ணின் இடையே
அமைந்த பார்வையைப் போன்றவன் நீ. செறிந்த இருளிடையே
அமைந்த ஒளியை ஒத்தவன் நீ.
மண்ணுலகில் அடியவர்களின் மனத்தில் துன்பம் வராமல் காக்கும்
திருக்குருகாவூர் வெள்ளடையில் இருப்பவனும் நீயல்லவா?
திருவாசகம்
வானம் நாடரும் அறி
யொணாத நீ
மறையில் ஈறும் முன்தொடரொணாத
நீ
ஏனை நாடரும் தெரியொணாத
நீ
என்னை இன்னிதாய் ஆண்டு
கொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா
உருகி நான் உனைப்
பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா
நைய வையகத்து உடைய
விச்சையே.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment