Thursday, February 28, 2019

பிப்ரவரி-28 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்

          
           வாழினுஞ் சாவினும் வருந்தினும் போய்
           வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
           தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
           போழிள மதிவைத்த புண்ணியனே
     இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
     அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

          ஒளிமிக்க செஞ்சடையில் கங்கை திகழப் பிறைமதியைத் தரித்து விளங்கும் புண்ணியனேநான் இப்பிறப்பில்; வாழ்ந்தாலும், இறந்தாலும், வருந்தினாலும், பாவக்குழியில் விழுந்தாலும் உனது திருவடியை மறக்கமாட்டேன்.    
           அவ்வாறு இருக்க எமக்குத் தேவைப் படுகின்ற பொருளைத் தந்து அருள் புரியவில்லையானால் அது உமது திருவருளுக்கு அழகாகுமோ?

திருவாசகம்

 மருளனேன் மனத்தை மயக்குற நோக்கி
  மறுமையோடு இம்மையும் கெடுத்த
 பொருளனே புனிதா பொங்கும் வாளரவம்
    கங்கை நீர் தங்கும் செஞ் சடையாய்
      தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்
   அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே.

     மருண்டு கி;டக்கின்ற எனது உள்ளத்தை மயக்கந் தீருமாறு திருவருட் கண்கொண்டு பார்த்து இம்மை, மறுமை என்னும் இரண்டும் உடைய பிறவியை யொழித்த மெய்ப் பொருளானவனே, தூய நன்மைத் திருவுருவே, ஒளி மிளிரச் சீறுகின்ற பாம்பும் கங்கையும் தங்கிய சிவந்த சடையுடையவனே, நான்மறைகளும் பொருந்திய திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் வீற்றிருந்த கருணையாளனே, அடியேன் உன்னை அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்றருள் செய்வாயாக.





தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  

Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment