தேவாரம்
நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார்
மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.
உயர்ந்ததாக விளங்கும் செம்பொன்னால் ஆகிய திலகம் போன்று,
எல்லா உலகங்களுக்கும் பிரதானமாக விளங்கி மேவுவது, ஈசனின்
திருநாமமாகிய நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தாகும். இத்திரு
நாமத்தை மிகுந்த விருப்பத்துடன் ஓதுபவர்களுக்கு,
அது மணம் தரும் புதுமலரில்
துளிர்க்கும் தேனின் சுவைக்கு ஒப்பாகி
இனிமை தரும்.
திருவாசகம்
குழைத்தால்
பண்டைக் கொடுவினை நோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி உண்டோதான்
உமையாள் கணவா எனை
ஆள்வாய்
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோ என்று
அழைத்தால் அருளாது ஒழிவதே
அம்மானே
உன் அடியேற்கே.
உன்பால் கொண்ட அன்பு
காரணமாக என் உள்ளத்தைக் குழைத்தேன். ஆதலினால்
என் பண்டைத் தீவினையின் பிடியிலிருந்து
என்னைக் காத்து அருள் செய்க. இச்செயலை
விடாது செய்தால் ஈடேறலாம் என்ற உறுதியும் உண்டு
தானே? உமையொரு
பாகா. நான்
குற்றம் செய்தால் அதனை நீ பொறுத்தருள
வேண்டாமா? மதி
சூடிய சடையுடையாய், நான் ஓலமிட்டு அழைத்தால்
அருள் செய்யாது போவதும் முறையோ?
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment