Wednesday, February 13, 2019

பிப்ரவரி-13 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்


     
     
      ஆன்முறையால் ஆற்ற வெண்ணீறாடி, அணியிழையோர்
      பான் முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
      மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றியகை
      நான் மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
 
     நள்ளாற்று சிவபெருமான், பசுவிலிருந்து முறைப்படி செய்த திருநீற்றை அணிந்தவர்; உமாதேவியை இடப்பாகம் கொண்டவர்; மான், மழு, சூலம் இவற்றைக் கரத்தில் ஏந்தியவர்; நான்கு வேதங்களுக்கும் தலைவர். அவருடைய திருப்பாதத்தைப் பக்தர்கள் பணிந்து ஏத்துகின்றனர்.


திருவாசகம்
         
          
           மாடு நகைவாள் நிலாவெறிப்ப
 வாய் திறந்து அம் பவளம் துடிப்பப்
           பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
   பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
           தேடுமின் எம் பெருமானைத் தேடிச்
 சித்தம் களிப்பத் திகைத்துத் தேறி
           ஆடுமின் அம்பலத்து ஆடினானுக்கு
              ஆடப்பொற்சுண்ணம் இடித்துநாமே.

                        வெண்பற்கள் ஒளிர, பவள வாய் திறந்து அத்தன், அம்பலவன் நம்மை ஆண்ட விதத்தைப் பாடுங்கள். அவன் நம்மை அடிமைகொண்டு நம் பணியை ஏற்றுக் கொண்ட அழகையும் திரும்பத் திரும்பப் பாடுங்கள் பாடி அவனைத் தேடுங்கள்தேடிச் சித்தம் களித்திருங்கள். அவனது முன்னிலையை உணராவிடில் திகைத்துப் பின் உணர்ந்து தெளிவடையுங்கள். தில்லை அம்பலத்தில் நட்டம் புரியும் நம் ஈசன் திருமுழுக்கு ஆடச் சுண்ணம் இடிப்போமாக.












தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  
Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment