தேவாரம்
விருத்தனாகி வெண்ணீறு பூசிய
கருத்தனார் கனலாட்டு உகந்தவர்
நிருத்தனார் நெல்வாயில் மேவிய
ஒருத்தனார் எமது உச்சியாரே.
நெல்வாயில் மேவிய குணக்குன்றே! ஒப்பற்ற
கனகமே! வெந்தநீறு பூசிய வேந்தனே! எல்லாப்
பொருள்களுக்கும் மூத்தவனே! நெருப்பு தாங்கிய நின்மலனே! நடமாடும்
நிருத்தனே! உச்சி நாதேஸ்வரப் பெருமானே!
உன்னையே என் சென்னி உச்சியில்
வைத்து இடையறாது வழிபடுவேன். என் கருத்துள் இருந்து
அருள் செய்து காக்கப் பிரார்த்திக்கின்றேன்.
திருவாசகம்
முத்தனை முதற் சோதியை
முக்கண்
அப்பனை முதல் வித்தினைச்
சித்தனைச்
சிவலோகனைத் திரு
நாமம் பாடித் திரிதரும்
பக்தர்காள் இங்கே வம்மின் நீர்
உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்தமார்
தருஞ் சேவடிக்கண் நம்
சென்னி மன்னித் திகழுமே.
பற்றற்ற பரம்பொருளை, ஆதியாம்
சோதிப் பிழம்பை, முக்கண்ணினனாகிய நம் அப்பனை, மூலவித்து
ஆனவனை, ஞான வடிவானவனை, சிவபுரத்து
வேந்தனை, பற்பல பெயர் கூறிப்
பாடித் திரிகின்ற அன்பர்களே, இங்கே வாருங்கள். உங்களது
பந்த பாசமெனும் கட்டு அறுகின்றவாறு அவனைப்
புகழ்ந்து பணியுங்கள். அவனது
திருவடிகளில் நம் சென்னி பொருந்தி
விளங்கட்டும்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment