தேவாரம்
பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தனாற் பத்தி செய்கேன் என்னைநீ
இகழ வேண்டாம்
முத்தனே முதல்வா தில்லை
அம்பலத்து ஆடுகின்ற
அத்தா உன் ஆடல்
காண்பான் அடியனேன் வந்தவாறே.
தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற என் இறiவா!
உன் புகழைப்பாடவும் அறியாமல், உன்பால் பக்தி செய்யவும்
தெரியாமல், உலகியலில் சிக்கித் தவிக்கின்ற என்னை, “இவன் தகுதியற்றவன்” என்றெண்ணி
இகழ்ந்து ஒதுக்கிவிட வேண்டாம். முத்தனே! எல்லா வற்றுக்கும் முதல்வனே!
அருட் கூத்தனே! உன் ஆனந்த நடனத்தைக்
காண்பதொன்றே யான் உய்யும் வழியாகும்
என்றெண்ணி, திருமுன்பு வந்துள்ளேன். ஆதலின், தரமன்று என்று
என்னைத் தள்ளி விடாமல், ஆடல்
தரிசனம் தந்தருளி எளியவனை ஆட் கொள்வாயாக!
திருவாசகம்
செய்வது அறியாச் சிறுநாயேன்
செம்பொற் பாதமலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு
அத்தனையும்
பெறுதற்கு உரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்
பாதம்
மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து
இங்கு
இருப்பதானேன் போரேறே.
ஆண் சிங்கத்தை ஒத்தவனே,
அண்ணலே. உனது பெருமையை அறிந்து
கொள்ளாத அறிவிலி நான். ஞானச் சுடரான உன்னை
வணங்காது, நிலையற்ற உடலைப் பேணி அதில்
பெறுகின்ற அற்பசுகத்தை விரும்புகின்ற நாய் போன்றவன். பற்றற்ற உனதடியார்கள் உனது
திருவடிகளைப் பொருந்தினமையைப் பார்த்தும் கேட்டிருந்தும் அவர்களது செந்நெறி சேராது நான் உண்டும்
உடுத்தியும் இருக்கின்றேன். யான் துன்பத்திற்கே உரியவன்.
என்னை உயர்த்தி அருள் புரிக.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment