தேவாரம்
செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்
சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு
மகிழ்ந்து நிற்க
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கொத்த நீல
மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல் கண்டாற் பின்னைக்
கண்கொண்டு
காண்பதென்னே.
வயல்களிலே நீலமலர்கள் மலர்கின்ற தில்லை. அங்கே சிற்றம்பலவாகிய
பெருமான் மைபூசிய ஒளிமிக்க கண்களைக்
கொண்டு பார்வதியை கண்டு மகிழ்ந்து நிற்கிறான்.
நெய் நிற்க எரிகின்ற விளக்கின்
ஒளி போல நீல மணி
போலும் கழுத்தை உடைய அப்பெருமானின்
கை நின்று காட்டும் ஆட்டத்தை
கண்ட பின்பு இக்கண்களால் காண்பதற்கும்
ஒன்று உண்டா? இல்லையே!
திருவாசகம்
கூறும் நாவே முதலாகக்
கூறுங் கரணம் எல்லாம்
நீ
தேறும் வகை நீ
திகைப்பு நீ
தீமை நன்மை முழுதும்
நீ
வேறோர் பரிசு இங்கு
ஒன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகை என்
சிவலோகா
திகைத்தால் தேற்ற வேண்டாவோ.
சிவலோக நாயகனே, நாக்கு
முதலாகப் பேசப்படும் புறக்கருவிகள் எல்லாம் நீயே. நன்மையும்
தீமையும் நீயே. அனைத்தும்
நீயே (ஒன்றாயும் வேறாயும், உடனாயும் நிற்கும் தன்மை) என்னும் தெளிவைப்
பெறாமல் நிற்கும் என்னைத் தேற்றியருள்க.
மாயை எனும் திரை நீக்கி
நின் திருவளைக் காணுமாறு அருளுக. என்
திகைப்பை நீக்கித் தெளிவை அருள்தல் உன்
கடன் அல்லவோ. உன்
அருளை எதிர் நோக்கி நிற்கும்
இந்த அடியவனைக் காத்தருள்வாய்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment