தேவாரம்
கண்காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.
திருவெண்காட்டில் இருக்கும் காளை பொறித்த கொடியையுடைய
சிவபெருமான் நெற்றியில் கண்ணுடையவன். கையில் நெருப்பை ஏந்தியவன்.
உமையை ஒரு பாகத்தில் கொண்டவன்.
பண்களோடு கூடி இசை வடிவானவன்.
அவன் பயிரை வளர்க்கும் மேகமும்
ஆனவன்.
திருவாசகம்
அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன்
வாழ்க
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க
சூழ் இரும் துன்பம்
துடைப்போன் வாழ்க
எய்தினர்க்கு ஆரமுது அளிப்போன் வாழ்க
கூரிருள்
கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேர் அமைத் தோளி
காதலன் வாழ்க
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன்
வாழ்க
நல் தவம் செய்வோர்க்கு
அருள் சுரக்கின்ற ஆதிப் பொருள் வாழ்க.
உயிர்களின் அச்சத்தைப் போக்கி அணைத்துக் கொள்ளும்
காவலன் வாழ்க. உயிர்களைச் சூழ்ந்திருக்கும்
துன்பங்களைத் துடைப்பவனும், தன்னை அண்டினவர்களுக்கு அமுதத்தை
தருபவனுமாகிய அன்புக் கடல் வாழ்க.
நள்ளிருளில் நடம் புரியும் நாதன்
வாழ்க. உமையவளின் நாயகன் வாழ்க. அந்நியர்க்கு
அந்நியமாய் இருப்பவனும், தனக்கு ஆட்பட்டவர்களுக்குச் சேம
நிதியாக உள்ளவனுமாகிய பெருமான் வாழ்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Thevaram Thiruvasagam Song with Meaning.
Excellent please give entire song with meaning. thankyou
ReplyDelete