Tuesday, January 8, 2019

ஜனவரி-8 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Thevaram Thiruvasagam Song with Meaning


தேவாரம்

   
                   
         அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
         பொன்னம் பாலிக்கும்; மேலும் இப் பூமிசை
         என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
         இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே.

         தில்லைச் சிற்றம்பலம் உண்ண உணவளிக்கும்; பொன்னும் தரும்; இவற்றுக்கு மேலும் இவ்வுலகில் எல்லாம் அளிக்கும். அத்தகைய சிற்றம்பலக் காட்சியைக் கண்டு மகிழ இப்பிறவி இன்னமும் வாய்ப்பளிக்குமா?



திருவாசகம்

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு
    அவரினும் அன்ப போற்றி
      பேர்ந்துமென் பொய்மை ஆட்கொண்டு
      அருளிடும் பெருமை போற்றி
      வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு
       அமுதம்ஈ வள்ளல் போற்றி
                 ஆர்ந்த நின்பாதம் நாயேற்கு
       அருளிட வேண்டும் போற்றி.


      உன்மீது பேரன்பு கொண்டிருக்கும் உனது அடியவர்கள் மீது அவர்களை விட அதிகம் அன்பு வைத்துள்ள அன்புக்கரசே! எனது உலகியல் சிந்தையை களைந்து சிவபோகத்தைத் தந்த பெருமை உடையவனே, பொங்கி வந்த நஞ்சை நீP ஏற்று, விண்ணவர்க்கு அமுதம் ஈந்த வள்ளலே, நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். அடியவனுக்கு உனது செங்கமலப் பாதம் தந்தருள வேண்டும்.



தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment