தேவாரம்
மண்ணில் நல்ல வண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு
யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல
வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
கழுமலம் என்னும் பெயருடைய
சீர்காழியாகிய வளமிக்க நகரில், பெருமை
மிக்க சிவபெருமான், பெண்களில் உயர்ந்த உமாதேவியாரோடு வீற்றிருக்கின்றார்.
அவரை நாள்தோறும் வழிபட்டு வந்தால், இவ்வுலகில் நல்லமுறையில் வாழலாம். நற்கதியாகிய முக்தியையும் குறைவில்லாமல் அடையலாம்.
திருவாசகம்
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறுடையாள்
ஒருபாகம்
விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழலிணைகள் காண்பாரோ அரியானே.
வானவர்கள் உன்னை வாழ்த்துகின்றனர்.
அறிவுக்கு முதலாகிய நான்மறைகளும் உன் புகழையே ஒலிக்கின்றன. நறுமணம்
பொருந்திய கூந்தலையுடைய உமையம்மை உன் இடப்பாகத்தே இடம்
கொண்டிருக்கிறாள். உண்மை
அன்புடைய உனது அடியவர்கள் தொகுப்புத்
தொகுப்பாக உன்னை வழிபடக் கூடுகின்றனர். யாரும்
அறிதற்கு அரியவனே, கழல்கள் ஒலிக்கின்ற உனது
திருவடிகளை இவர்களில் யார் தான் கண்டிருக்கின்றனர். ஐயனே,
அருள் காட்சி தந்தருள்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment