தேவாரம்
நங்கையைப்
பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில்
அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையில்
யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச்
சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
கழிப்பாலையில் இருக்கும் தலைவர், பெண்ணைத் தன்
உடலில் பாதியாக வைத்தார்; ஞானத்தைத்
தன் நாவால் ஓதுதற்கென்று வைத்தார்;
தனது உள்ளங் கையில் நெருப்பை
வைத்தார்; தனக்கு உடையாக யானையின்
தோலை வைத்தார்; மற்றோர் கையில் யாழைக்
கொண்டார்; தாமரை மலரையும் கொண்டார்;
கங்கை ஆற்றைத் தம் சடையில்
கொண்டார்.
திருவாசகம்
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து
உளுத்து அசும்பு ஒழுகிய
பொய்க்கூரை
இத்தை மெய் எனக்
கருதி நின்று
இடர்க் கடற் சுழித்தலைப்
படுவேனை
முத்து மாமணி மாணிக்க
வயிரத்த
பவளத்தின் முழுச் சோதி
அத்தன் ஆண்டு தன்
அடியரிற்
கூட்டிய அதிசயம் கண்டாமே.
உள்ளீடற்ற தசைச் சுவரும், புழு
நிறைந்து உளுத்து நிண நீர்
வடிகின்ற கூரையும் கொண்ட இவ்வுடம்பை ஒரு
நிலையான பொருளெனக் கருதித் துன்பக் கடல்
சுழலில் அகப்படுகின்ற என்னை மணிகளுள் சிறந்த
மாமணியாம், முத்தும், மாணிக்கமும் பவளமும் கலந்து ஒளிகாட்டும்
திருமேனி உடைய அப்பன் ஆட்கொண்டு
தன்னடியார்களோடு சேர்ப்பித்த அதிசயம் கண்டோம் நாம்.
அவனைப் போற்றிப் பாடுவோம்.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment