தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறி
ஓர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடி
பூசி
என் உள்ளம் கவர்
கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாட்
பணிந்து
ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே.
தாமரை மலரில் அமர்ந்த
பிரமன், வணங்கிப் பாடிட அவனுக்கு அருளைச்
செய்தவன் சிவபெருமான்;. அவன், பெருமையையுடைய சீர்காழியில்
விரும்பித் தங்கியவன்;, தன் ஒற்றைச் செவியில்
தோடு அணிந்தவன்;, காளையை வாகனமாகக் கொண்டவன்;,
பிறை நிலவைச் சூடியவன்;, சுடு
காட்டின் சாம்பலை மேனியில் பூசிக்
கொண்டவன்;. அத்தகைய பெம்மான் இவனல்லவோ
என் உள்ளம் கவர்ந்த கள்வனாய்
அருள் செய்தவன்.
திருவாசகம்
மருவினிய மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந்து உள்ளுருகத்
தெருவு தொறும் மிக
அலறிச் சிவபெருமான் என்று ஏத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலில் படிவாமாறு
அருள் எனக்கு இங்கு
இடைமருதே இடங்கொண்ட அம்மானே.
திருவிடைமருதூரில் கோவில் கொண்டிருக்கும் எம்
அண்ணலே, மருவுதற்கு இனிய மலர் போன்ற
உனது திருவடிகள் எனது உள்ளத்தில் தோய்ந்து
எனது நெஞ்சு உருகவும், நான்
தெருவெல்லாம் உனது பெருமைகளைப் பாடி
வழிபட்டு உனது பேரருளைப் பருகவும்,
உனது கருணை எனும் பெருங்கடலில்
மூழ்கித் திளைக்கவும் எனக்கு நீ அருள்
செய்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் - Daily Thevaram Thiruvasagam
No comments:
Post a Comment