Thursday, January 17, 2019

ஜனவரி-17 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert

தேவாரம்

        நல்குரவும் இன்பமும் நலங்கள் அவையாகி
        வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடமென்பர்;
        பல்கும் அடியார்கள் படியார இசைபாடிச்
        செல்வமறையோர் உறை திருப்புகலி யாமே.

        வறுமை, இன்பம், நலங்கள் என்ற வடிவில் நம்மைத் தொடரும் வலிய வினைகளைத் தீர்த்து நமக்கு அருள் செய்யும் வலிமை மிக்கவன் உறைகின்ற இடம், மிக்க பல அடியவர்கள் இடமெங்கும் நிறைந்து இசைபாட செல்வ வளமிக்க அந்தணர்கள் வசிக்கும் திருப்புகலியாகும்.


திருவாசகம்


பரந்து பல் ஆய்மலர் இட்டு
       முட்டாது அடியே இறைஞ்சி
     இரந்தவெல்லாம் எமக்கே பெறலாம்
     என்னும் அன்பர் உள்ளம்
      கரந்து நில்லாக் கள்வனே நின் தன்
       வார் கழற்கு அன்பு எனக்கு
  நிரந்தரமாய் அருளாய் நின்னை
 ஏத்த முழுவதுமே.


                நந்தவனங்கள் பலவற்றிற்கும் சென்று பழுதில்லாத பல்வகை மலர்கள் கொய்து நின் திருவடியில் சார்த்தி நின்னை வணங்கி வாழ்த்தி உன் அருளால் தாம் விரும்பிய யாவும் கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டோடு இருக்கின்ற அன்பர்கள் உள்ளத்தில் நீ ஒளிக்காமல் வெளிப்பட்டருள்கிறாய்மற்றவர்கள் நெஞ்சில் மறைந்து நிற்கின்றாய்மாயமுடையவனே, உன்னை வாழ்த்தி வழிபடுகின்ற பத்திமையை இடைவிடாது செய்யக் கூடிய வரத்தினை எனக்கருள்வாயாக.



தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Alert  


Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment