தேவாரம்
சாநாளும் வாழ்நாளும்;; சாய்க்காட்டு
எம்பெருமாற்கே
பூ நாளும் தலை
சுமப்ப புகழ் நாமம் செவி
கேட்ப
நா நாளும் நவின்று
ஏத்தப் பெறலாமே நல்வினையே.
நன்னெஞ்சே! நீயே நினைத்துப்பார், யாரால்
வாழ் நாளையும் இறுதி நாளையும் அறிந்து
கொள்ள முடியும்? எனவே இருக்கும் நாட்களில்
இறைவனுக்காகப் பூக்களைத் தலையில் சுமந்து வருவோம்,
இறைவனுடைய திருநாமங்களைச் செவியில் குளிரக் கேட்போம், அவன்
புகழை நாவினால் தினமும் பாடி வருவோம்.
திருச்சாய்க்காட்டு ஈசனை இவ்வாறு வழிபட்டு
நற்கதியை நாம் அடைவது உறுதியாம்.
திருவாசகம்
வானாகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென்று
அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்
சொல்லி வாழ்த்துவனே!
எம்பெருமானே, விண், மண், காற்று,
நீர், நெருப்பு என்னும் ஐம்பெரும் பூதங்களும்
ஆனவன் நீ. உடலும் உயிரும்
ஆனவனும் நீ. தோன்றும் பொருளாகவும்
தோன்றாப் பொருளாகவும் துலங்குபவனும் நீயே. பல்வகைப் பட்ட
உயிர்களையும், யான் செய்தேன், என்னுடையது
என்று புல்லறிவால் மயங்கிக் கூத்தாடும்படி அவற்றை இயக்குபவனும் நீயே.
உன் பெருமையை நான் என்ன சொல்லிப்
புகழ்வேன். இறையே காத்தருள்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment