தேவாரம்
குனித்தப் புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
புனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண் ணீறும்
இனித்தம் உடைய எடுத்தபொற் பாதமும்
காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
வளைந்த புருவத்தையும், கோவைப்
பழம்போன்று சிவந்த வாயில் குமிழியிடும்
சிரிப்பையும், ஈரமான சடையையும், பவளம்
போன்ற உடம்பில் பால்போன்ற வெண்மையான திருநீற்றுப் பூச்சையும், உலகம் இனிதாகத் தூக்கிய
ஒற்றைத் திருவடியையும் காணப்பெறும் பேறு கிடைக்குமென்றால் இவ்வுலகில்
மனிதப்பிறவி கூட வேண்டுவதுதான்.
திருவாசகம்
கூவின பூங்குயில் கூவின
கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி
உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை
காட்டாய்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
திருப்பெருந்துறை மேவிய சிவனே, புள்ளினங்கள்
கூவுகின்றன. சங்குகள்
ஒலிக்கின்றன. வானில்
விண்மீன்கள் மறைந்தன. உதயச்
சுடரொளி தோன்றுகிறது. யாரும்
அறிய முடியாதவனே, எங்களுக்கு எளிய இறைவா! எம்
தலைவா, பள்ளி எழுந்தருள்வாயாக எம்பால்
விருப்பம் கொண்டு வீரக்கழல் செறிந்த
நின் திருவடிகளைக் காட்டி அருள்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment