Wednesday, January 9, 2019

ஜனவரி-9 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Thevaram Thiruvasagam Song with Meaning


தேவாரம்



          பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்;
          நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்;
          அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
          தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.


      பனைமரம் போன்ற தும்பிக்கையினையும், மூன்று இடங்களிலிருந்து வழியும் மதநீரையும் கொண்ட யானையின் தோலை உரித்தவன், தன்னை நினைப்பவர் உள்ளத்தை கோயிலாகக் கொண்டு இருப்பவன், எல்லா உருவங்களிலும் பொருந்தி இருப்பவன்;, அத்தகைய அம்பலக் கூத்தனை தினையளவு பொழுதேனும்நான் மறந்து வாழ்வேனோ? மாட்டேன்.


திருவாசகம்

 தேவ தேவன் மெய்ச்சேவகன்
     தென்பெருந்துறை நாயகன்
                 மூவராலும் அறியொணா
         முதலாய ஆனந்தம் மூர்த்தியான்
 யாவராயினும் அன்பர் அன்றி
        அறியொணா மலர்ச் சோதியான்
   தூய மாமலர்ச் சேவடிக்கண் நம்
    சென்னி மன்னிச் சுடருமே.
             
   
    விண்ணவர் தலைவன், மெய்யான வீரன், மூவராலும் அறியப்படாத முதல்வன், பேரின்ப வடிவினன், பெருந்துறைப் பேராளன், தூய அன்பு கொண்ட அன்பர் தவிரப் பிற எவராலும் அறிய முடியாத பூவொளி மேனியன் அவன். தாமரை மலர் போன்ற அவனது திருவடிகளில் நமது தலை சாய்த்து வணங்கி வாழ்த்துவோம். வளம் பெறுவோம்.

தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Thevaram Thiruvasagam Song with Meaning


No comments:

Post a Comment