தேவாரம்
இடரினுந் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில்
அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு
ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள்
ஆவடுதுறை அரனே.
பாற்கடலின்கண், அமுதத்தைக் கடைந்தெடுக்கும்போது தோன்றிய நஞ்சினை கழுத்தில்
அடக்கி வைத்துக் காத்தருளிய வேத நாயகனே! எனக்குத்
துன்பம் வந்தாலும், மனம் தளர்ச்சியடைந்தாலும், எனக்கு நோய்கள்
தொடர்ந்து வந்தாலும், உனது பாதத்தையே தொழுது
வணங்குவேன்.
அவ்வாறு இருக்க எமக்குத்
தேவைப் படுகின்ற பொருளைத் தந்து அருள் புரியவில்லையானால்
அது உமது திருவருளுக்கு அழகாகுமோ?
திருவாசகம்
மாயனே மறி கடல்
விடம் உண்ட
வானவா மணி கண்டத்து
எம் அமுதே
நாயினேன் உனை நினையவும் மாட்டேன்
நமச்சிவாய என்று உன்னடி பணியாப்
பேயன் ஆகிலும் பெருநெறி
காட்டாய்
பிறை குலாம் சடைப்
பிஞ்ஞகனேயோ
சேயன்
ஆகி நின்று அலறுவது அழகோ
திருப்பெருந்துறை மேவிய சிவனே.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment