Wednesday, January 16, 2019

ஜனவரி-16 தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert


தேவாரம்
      
            விதியாய்; விளைவாய் விளைவின் பயனாகிக்
            கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
            பதியாவது பங்கயம் நின்று அலரத் தேன்
            பொதியார் பொழில் சூழ் புகலிந் நகர் தானே.



    நம் விதியாயும், அதன் வினையாகவும். வினைப்பயனாகவும், பற்றிடப் பெருகிய சினத்துடன் வரும் எமனை உதைத்தவன் சிவபெருமான். அவனுடைய திருத்தலம், தாமரை மலர், அதன் தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருப்புகலியாகிய சீர்காழி நகரமாகும்.



திருவாசகம்

    
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
        எண்ணி எழு கோகழிக்கு அரசைப் - பண்ணின்
        மொழியாளோடு உத்தரகோச மங்கை மன்னிக்
        கழியாது இருந்தவனைக் காண்.





                சீர்மிகுந்த திருவாவடுதுறைக்கு (கோகழி) அரசனை, பண் போன்ற மொழியுடைய பெருமாட்டியுடன் உத்தரகோசமங்கையை விட்டு நீங்காதிருக்கும் பெருமானை, நெஞ்சமே நீ அங்கெல்லாம் சென்று காண வேண்டுமென்பதில்லைநம் வினைகள் நம்மை விட்டு நீங்க வேண்டுமெனில் திருப்பெருந்துறைக்குச் சென்று அவனைக் கண்டு வணங்குவாயாக! வணங்கி வளம் பெருக வாழ்த்துவோம்.


தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும்  - Daily Thevaram Thiruvasagam Song with Meaning

No comments:

Post a Comment