தேவாரம்
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனை பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால்
உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
“நெடுங்களம் என்னும் பதியில் விளங்கும்
பெருமானே!
வேதத்தலைவரே,
தோல் ஆடையரே, சடைமேல் பிறையுடையவரே,
தலைமாலையுடையவரே” என்று
புகழ்வதன்றி வேறொன்றும் அறியாத அடியவர், குறையுடையவராயிருந்தாலும்,
அவர்களது குற்றங்களை எண்ணிப் பார்க்க மாட்டீர்.
அத்தகைய உயர்ந்த வழிபாடு உடையவர்களது
துன்பங்களை நீக்குவீராக.
திருவாசகம்
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்லினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய
வெள்ளத்தே.
பேரி;ன்ப வாழ்வு
பெற்று வாழக் கருதாத பேதை
மனமே, நீ வீணே உலக
வாழ்வில் பற்று வைத்து வினையில்
அகப்பட்டுத் துயரத்தில் அழுந்துகின்றாய், அவ்வாறு நீ அழுந்தாதவாறு
காக்க வல்ல கடவுளை நினைந்து
வழிபடாமல். உனக்குக்
கெடுதியையே உண்டாக்கிக் கொள்ள எண்ணுகிறாய்.
உனக்குப் பலமுறை எடுத்துச் சொல்லியும்
நீ அதனைக் கேளாது துன்பக்
கடல் என்னும் பெருவெள்ளத்தில் வீழ்ந்து
அழிகின்றாய் என் செய்வது. எம்பெருமான்
துணையை நாடுக.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment