தேவாரம்
தாமென்றும் மனம் தளராத் தகுதியராய்
உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார்தமைக் காக்கும் கருணையினான்
ஓமென்று மறை பயில்வார்
பிரமபுரத்து உறைகின்ற
காமன்றன் உடல்எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.
ஓம் என்று வேதம்
பயிலும் அந்தணர் வாழும் சீர்காழியில்,
காமனின் உடல்எரிய நெற்றிக் கண்ணால் அழித்த சிவபெருமான்
தங்கியுள்ளான். அவன், மனம் தளராத
சிறந்த பக்தியுடன் உலக நலன் பொருட்டுத்
தன்னைச் சரணடையும் அடியவரைக் காக்கும் கருணையைப் பொழிவான்.
திருவாசகம்
பெரும்
பெருமான் என் பிறவியை
வேரஅறுத்துப் பெரும் பிச்சுத்
தரும் பெருமான் சதுரப்
பெருமான்
என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான் மலரோன்
நெடுமால் அறியாமல் நின்ற
அரும் பெருமான் உடையாய்
அடியேன் உன் அடைக்கலமே.
வானவர் தலைவனே, என்
பிறவியை வேரறுத்து, அருட்பித்தினை உண்டாக்கு கின்ற பெருந்திறலுடைய பெருமானே,
என் சித்தத்துள் குடிகொண்ட சிவ குருவே, பிரமனும்
திருமாலும் தேடி அலைந்தும் காணுதற்கு
எட்டாத பரம்பொருளே, என்னை உடையவனே, அடியேன்
உனது அடைக்கலம் ஐயனே காத்தருள்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment