பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார்
பிணி களைவாய்;
ஓடு நன்கலனாக உண்பலிக்கு
உழல்வானே
காடு நல் இடமாகக்
கடு இருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை
நீயன்றே.
கபாலம் கையில் ஏந்திப்
பிச்சை ஏற்கத் திரிபவனே! காடே
நல்ல இடமாகக் கொண்டு செறிந்த
இருளில் நடமாடுபவனே! திருக் குருகாவூர் வெள்ளடையில்
அமர்ந்தவனே. நீ, உன்னைப் பணிந்து
பாடுபவருடைய பசியைப் போக்குவதுடன், அவர்தம்
நோய்களையும் நீக்குவாய்.
திருவாசகம்
என்னை அப்பா அஞ்சல்
என்பவர் இன்றி
நின்று
எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி
கண்டாய்
உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும்
உத்தர
கோசமங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு
அத்தன் ஒப்பாய்
என் அரும்பொருளே.
உத்தரகோசமங்கை ஆள்பவனே, என்னைக் கண்டு இரங்கி
‘அப்பா, நீ அஞ்சாதே’ என்று சொல்லுவார் யாருமன்றி
நான் ஏங்கி இளைத்து அலைந்தேன். எனக்குத்
தாய் போன்றவனே, தந்தை அனையவனே, அரும்பெரும்
பொருளே, உனக்கு நீயே நிகரானவன்,
மின்னலென ஒளிரும் மேனியனே உன்
உதவியை நாடி நிற்கும் என்னை
விட்டு விடாதே காத்தருள்க.
தினம் ஒரு தேவாரம் திருவாசகம் பாடலும் பொருளும் - Daily Alert
Thevaram Thiruvasagam Song with Meaning
No comments:
Post a Comment